கறுப்பு நிறக் கொண்டைக் கடலை மூலம் நாம் பெரும் நன்மைகள்
Top Tamil News September 15, 2025 11:48 AM

பொதுவாக கருப்பு கொண்டைக்கடலை சரும பிரச்சனைகளை இல்லாமல் செய்யும் . உங்க சருமம் இயற்கையான பொலிவுடன் இருக்க செய்கிறது . கருப்பு கொண்டைக்கடலை உடலுக்கு ஆற்றலை அள்ளி கொடுக்க வல்லது . இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் எடை இழப்பு, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம் 

1.கறுப்பு நிறக் கொண்டைக் கடலை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். 
2.கறுப்பு நிறக் கொண்டைக் கடலை வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer)  போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. 
3.கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து உள்ளது  4.கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. 
5.கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. 
6.வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. 
7.முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். 
8.சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் கறுப்பு நிறக் கொண்டைக் கடலை சாப்பிடலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.