சென்னையில் ஒரே நாளில் திடீரென 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்வதால் 24 மணி நேரமும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரையில் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை.
இதற்கு நிர்வாக காரணம் என்று மட்டும் சொல்லப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக கடந்த ஒரு வாரமாகவே விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 4 வருகை விமானங்கள், 4 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டன. முன்னறிவிப்பின்றி திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?