இந்திய திரையுலகில் சாதனைகள் பல இருந்தாலும், ஒரு தனிச்சாதனையைப் பெற்றவர் வேறு யாருமல்ல நடிகை ரம்யா கிருஷ்ணன்.இவர் தமிழில் தொடங்கி பாலிவுட் வரை தனது அழகும், நடிப்புத் திறமையும் கொண்டு ரசிகர்களின் இதயங்களை வசப்படுத்தியவர்.
கடந்த1983 முதல் இன்று வரை 5 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் ஜொலித்துள்ளார். மேலும், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வெங்கடேஷ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்களைத் தந்த முன்னணி நடிகை.
அவரின் பெருமைக்குரிய சாதனை என்ன தெரியுமா? அக்கினேனி குடும்பத்தின் 3 தலைமுறை ஹீரோக்களுடனும் திரை பகிர்ந்த ஒரே கதாநாயகி.தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவ் உடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு படங்களில் நடித்தார்.
அப்பா நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, ஹலோ பிரதர், அன்னமய்யா போன்ற சூப்பர் ஹிட்களில் தோன்றினார்.மகன் நாக சைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடுவில் மாமியாராகவும், பங்கர்ராஜுவில் பாட்டியாகவும் நடித்தார்.
பேரன் அகில் உடன் ஹலோ படத்தில் அம்மாவாகத் திரையைக் கவர்ந்தார்.இவ்வாறு தாத்தா -அப்பா-மகன்(பேரன்) என 3 தலைமுறையையும் தொடும் வகையில் நடித்து, சினிமா வரலாற்றில் இடம்பிடித்திருப்பது ரம்யா கிருஷ்ணனின் அசாதாரண சாதனையாகும்.