சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிக்கு மாணவர்கள் ஒழுங்காக வராவிடில் உள்மதிப்பீடு செய்யப்படாது. அதிகநாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தேசிய கல்விக்கொள்கை "NEP" 2020ன் படி பள்ளியில் உள்மதிப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.