அடுத்த பிரச்சார பயணம் குறித்து தலைமை நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் 2 மணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை அன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பெரம்பலூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த பிரச்சார பயணம் குறித்து தலைமை நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் 2 மணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். திட்டத்தை மாற்றி அமைக்கலாமா அல்லது எப்படி திட்டமிட்ட இடங்களில் உரையை நிறைவு செய்வது என்பது குறித்து விஜய் ஆலோசனை நடத்திவருகிறார். வரும் 20ம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நிர்வாகிகளுடம் பேசிவருகிறார்.