தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் மீண்டும் எலும்புகள் சேருவதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகும். ஆனால் இனிமேல் எலும்பு முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக அதனை ஒட்டக்கூடிய பசை ஒன்றை சீனாவின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பசை மூலம் ஒட்டிவிட்டால் எலும்பு முறிவு பிரச்சனை 3 நிமிடத்தில் சரியாகிவிடும். இந்த பசை ரத்தம் இருந்தால் கூட மூன்று நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டி விடும் என்றும் 150 பேருக்கு இது குறித்த சோதனை நடந்து வெற்றி பெற்றதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இனிமேல் எலும்பு முறிவு ஏற்பட்டால் இந்த பசை மூலம் மூன்றே நிமிடத்தில் குணமாக்கலாம் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran