புரிய வேண்டியவங்களுக்கு புரியும்! இபிஎஸ்க்கு செங்கோட்டையன் சூசக செய்தி!
Webdunia Tamil September 16, 2025 05:48 AM

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என பேசியிருந்த செங்கோட்டையன் தற்போது மீண்டும் ஒரு சூசக செய்தியை விடுத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி கால அவகாசம் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து செங்கோட்டையன் மன அமைதிக்காக வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அவர் “இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம். அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகதான் அன்று மனம் திறந்து பேசினேன். எனது பேச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை புரிகிறவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்” என கூறியுள்ளார்.

அதிமுகவினர் பலரும் கட்சி ஒருங்கிணைப்பை விரும்புவதாகவும், அதை பொதுச்செயலாளர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் செங்கோட்டையன் சூசகமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.