காலையில் வெறும் வயிற்றில் பிரெட் சாப்பிடும் பழக்கம் இருக்கா? காத்திருக்கும் ஆபத்து!
TV9 Tamil News September 18, 2025 08:48 AM

யாருக்குத்தான் பிரட் சாப்பிட பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். பரபரப்பான வாழ்க்கையில், பிரெட் தான் பலரின் வீடுகளின் காலை உணவாக (Breakfast) பயன்படுகிறது. ரொட்டி ஜாம் மற்றும் வெண்ணெய் சேர்த்து  விரும்பி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இல்லையெனில் பிரெட் ஆம்லெட் சாப்பிடும் பழக்கமும் பலருக்கும் இருக்கும். மேலும் ஒரு சிலர் காலையில் டீயில் பிரெட் நனைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் சுவையைப் போல அந்த பழக்கம்  நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பிரெட் என்பது எளிய காலை உணவாக இருந்து வருகிறது. கடைகளில் விதவிதமான பிரெட் உணவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக கடைகளில் விற்கப்படும் பிரெட் ஆம்லேட்டை இளைஞர்கள் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிக்க : காலை உணவாக சாப்பிடக்கூடாத உணவுகள்.. இது வயிற்றுக்கு பிரச்சனையை தரும்!

வெறும் வயிற்றில் பிரெட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

வெறும் வயிற்றில் பிரெட் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரெட்டில் கார்போஹைட்ரேட்டுகள், உப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன. இது உங்கள் செரிமான அமைப்பை பலவீனப்படுத்தும். செரிமானம் மோசமடையும் போது, ​​மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் செரிமான பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது

பிரெட்டில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இது உங்கள் செரிமான அமைப்பை பலவீனப்படுத்தும். வெள்ளை ரொட்டி சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குவதால், அது குடலில் குவிகிறது. இது மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். எனவே பிரெட்டை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை காலை உணவாக பிரெட் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பிரெட்டில் அதிக கிளைசெமிக் குறியீடு உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அதிகரித்த சர்க்கரை அளவு வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. வெள்ளை பிரெட்டில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளது. இது பசியை அதிகரித்து அதிக உணவை உண்ண வழிவகுக்கும். இதனால் கூடுதலாக உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும்.

இதையும் படிக்க : சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? இந்த பிரச்சனையை உண்டாக்கும் அபாயம்!

மேலும், வெள்ளை பிரெட்டில் அதிக சோடியம் உள்ளது. இது வியற்றுப் பகுதியில் வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். காலையில் சோடியம் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. அது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

( Disclaimer : இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு கடைபிடிப்பது மிகவும் நல்லது.)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.