பொதுவாக இஞ்சி ,பூண்டு ,பாதாம் பருப்பு மற்றும் கீரை வகைகள் நமக்கு ஆரோக்கியம் தரும் ,அந்த வகையில் மேற்கூறிய பொருட்களை உணவில் சேர்த்து வந்தால் நம் உடலில் எந்த நோய் தாக்காமல் தப்பிக்கலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.பாதாமில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. 2.தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
3.சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்
4.இஞ்சி வயிற்று புண்ணை குணப்படுத்தும்.
5.இஞ்சி சாப்பிடுவது உணவு செரிமானத்துக்கு சிறந்தது.
6.மேலும் இஞ்சியானது நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.
7. தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
8.அடுத்து பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது.
9.நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது.
10.இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது
11.அடுத்து அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
12.அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது.