கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மிளகு ஸ்ப்ரே, ஸ்டேப்ளர் பின் அடித்து கொடூரமாகத் தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயப்புரம் அருகேயுள்ள சரளகுன்னு பகுதியை சேர்ந்த ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரேஷ்மி ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 2 இளைஞர்களை தங்களது விட்டிற்கு வரவழைத்து இக்கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி 19 வயது இளைஞர் ஒருவரை கட்டி போட்டு இரும்பு ராடு, சைக்கிள் செயினை கொண்டு தாக்கி ஸ்ப்ரே அடித்து கத்தியால் மிரட்டி 19,000 பணத்தை பறித்துள்ளனர்.
பின்பு ஓணமன்று ஜெயேஷின் முன்னாள் நண்பர் ஒருவரை வரவழைத்துள்ளார். பின்பு அடித்து உதைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தி அவரிடம் பணம் மற்றும் செல்போன் பறித்துள்ளார்கள். போலீஸ் விசாரணையின் போது, தாக்குதலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் சிகிச்சையிலிருந்தபோது உண்மையை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
ஜெயேஷ், ரேஷ்மியை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இத்தாக்குதல் மாந்திரீகம் சம்பந்தபட்ட சடங்கில் ஒரு பகுதியாக இருக்கலாமென போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியாக தூங்கிய பாட்டி, வீடு புகுந்து பலாத்காரம்.! இளைஞர் வெறிச்செயல்.!
இதையும் படிங்க: இன்ஸ்டா மோகத்தால் வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!