இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, போஸ்ட், ஃபேஸ்புக் போஸ்ட், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் இப்போது கூகுள் ஜெமினியின் நேனோ பனானா ஏ.ஐ போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன.
இளம்பெண்களும், இளைஞர்களும் ஃபாலோ செய்துவரும் இந்த ட்ரெண்டில் ஆபத்து மறைந்திருக்கிறது என இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு அதிர்ச்சி ரகமாகத் தான் உள்ளது.
"இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ, நமது போட்டோவை சேலை அணிந்த போட்டோவாக மாற்றித் தருகிறது. நானும் இந்த ட்ரெண்டை ஃபாலோ செய்ய போட்டோவை அப்லோடு செய்திருந்தேன்.
அப்போது நான் அப்லோடு செய்திருந்த போட்டோவில் பச்சை கலர் ஃபுல் ஸ்லீவ் உள்ள ஆடையை அணிந்திருந்தேன். பின், பிராம்ப்ட் கொடுக்க, எனக்கு ஜெமினி ஏ.ஐ என் புகைப்படத்தை மாற்றிக் கொடுத்தது.
அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்தேன்.
பின்னர்தான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். ஜெமினி ஏ.ஐ கொடுத்திருந்த கருப்பு சேலை அணிந்திருந்த புகைப்படத்தில், எனது இடது கையில் ஒரு மச்சம் இருந்தது.
இந்த மச்சம் எனக்கு உண்மையிலேயே இருக்கிறது. ஆனால், அது நான் கூகுள் ஜெமினியில் அப்லோடு செய்திருந்த ஃபோட்டோவில் தெரியாது.
பிறகு எப்படி என்னுடைய மச்சம் கூகுள் ஜெமினிக்குத் தெரிந்தது. இது பயமாக உள்ளது.
இது எப்படி நடந்தது என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை.
அதனால், சமூக வலைத்தளம், ஏ.ஐ வலைத்தளங்களில் எந்தப் போட்டோவை அப்லோடு செய்வதாக இருந்தாலும் கவனமாக இருங்க" என்று கூறியிருக்கிறார்.
உஷார் மக்களே!
View this post on InstagramA post shared by झलक भावनानी ✨ (@jhalakbhawnani)