பீகார் மாநிலத்தில் வேலையில்லாத ஒரு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், ஆளும் கட்சியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
அதாவது விரைவில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.