தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி என். சதீஷ்குமார், “நிபந்தனைகள் எல்லா கட்சிகளுக்கும் ஒரே மாதிரி தானே? விஜய் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பினார்.
திருச்சி தவெக கூட்டத்தில் 23 நிபந்தனைகள் மீறப்பட்டு, பொது சொத்துக்கள் சேதமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. “திருச்சி சேதத்திற்கு இழப்பீடு வசூலிக்காவிட்டால், நீதிமன்றம் தலையிடும்,” என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றம், காவல்துறை பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. “கூட்டங்களை கட்டுப்படுத்துவது தலைவர்களின் பொறுப்பு,” திருச்சி கூட்டத்தில் தொண்டர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக காவல்துறை குற்றம்சாட்டியது, இதனால் தூத்துக்குடி பிரச்சாரத்துக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கு, 2026 தேர்தலுக்கு முன் தவெகவின் பிரச்சார உரிமைகளை உறுதி செய்ய முக்கியமானது. நீதிமன்றம், காவல்துறை விரைவில் முடிவெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவெகவின் திருச்சி மீறல்கள், தூத்துக்குடி பிரச்சாரத்துக்கு தடையாக அமைந்தன. அதே சமயம், இந்த வழக்கில் தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று கோஷமிடுவது, வாகனம் மீது ஏறுவது போன்ற செயலில் ஈடுபட்டு அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்றுக் கொள்வார்..? எனவும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?