தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராக நுழைந்திருப்பவர் கீர்த்தீஸ்வரன் (Keerthiswaran). இவரின் முன்னணி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகிவரும் படம்தான் டியூட் (Dude). இந்த படத்தில் கோலிவுட் இளம் நடிகர் பிரதீப் ரகங்கநாதன் (Pradeep Raganganathan) வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த டியூட் படமானது ப்ரண்ட்ஷிப் , காதல் மற்றும் நடனம் போன்ற மாறுபட்ட கதைக்களங்களில் தயாராகியுள்ளதாம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இது இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுக படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இசையமைப்பில் “ஊரும் பிளட்” என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், பாடலின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. “நல்லாரு போ” என்ற காதல் தோல்வி பாடலானது, நாளை 2025 செப்டம்பர் 19ம் தேதியில் வெளியாகிறது.
இதையும் படிங்க : இரண்டு பாகமாக உருவாகிறதா சிலம்பரசனின் STR49? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட் இதோ!
டியூட் படக்குழு வெளியிட்ட இரண்டாவது பாடல் பதிவு :டியூட் படத்தில் கேமியோ வேடத்தில் நடிக்கும் பிரபலம்Respect her choice, just say ‘Nallaru Po’ & move on like #DUDE 🫠
DUDE’S SECOND GEAR #NallaruPo (Tamil) | #BaagunduPo (Telugu) out tomorrow 📈🪽
Now, try guessing the singer 🤔🎙️
Composed by @SaiAbhyankkar 🎼
Tamil Lyrics – @Lyricist_Vivek
Telugu Lyrics – @ramjowrites #Dude… pic.twitter.com/fxLmgeXbnJ— Mythri Movie Makers (@MythriOfficial)
கடந்த 2025 மார்ச் மாதத்தில் இந்த படமானது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையானது முற்றிலும் வித்யாசமாக உருவாகியிருக்கிறதாம். பிரதீப் ரங்காநதனின் நடிப்பில் இறுதியாக வெளியன் டிராகன் படத்தில் நடிகை இவனா கேமியோ வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க : நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்
அதை அடுத்தாக இந்த டியூட் படமானது வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம். இது பற்றிய வீடியோ சமீபத்தில் இணையத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் பாடல்களை அடுத்ததாக அப்டேட் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.
டியூட் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் கூட்டணியில் இந்த டியூட் படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ரோகினி மற்றும் ஹிருது ஹூரன் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். டியூட் படமானது இதுவரை யாரும் எதிர்பார்க்காத கதைக்களத்தில் அமைந்துள்ளதாம்.
இப்படத்தில் பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது 2025 தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு திட்டமிட்ட நிலையில், அதன்படி வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.