வீட்டுப்பாடம் செய்யாமல் பிள்ளைகள் புரட்டி விடும் பதில்கள் எப்போதும் ஆசிரியர்களை கோபப்படுத்தினாலும், சில சமயங்களில் அவை நகைச்சுவையாகவும் அமைந்துவிடும்.
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுமி தனது வீட்டுப்பாடம் செய்யாததற்கு கொடுத்த அப்பாவி பதில், பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் @gujjuallrounder என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சிறுமியின் குறும்புத்தனமான பதில்களால் மக்களின் இதயங்களை வென்று, பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த சிறுமியின் மழலையான பேச்சும், தன்னம்பிக்கையான பதில்களும், “இப்படியும் ஒரு பதிலா?” என்று அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.
வீடியோவில், ஆசிரியர் சிறுமியிடம், “ஏன் வீட்டுப்பாடம் செய்யல?” என்று கேட்க, அவர் மிகவும் அப்பாவித்தனமாக, “என்னோட அக்கா தான் என் வீட்டுப்பாடத்தை செய்வாங்க” என்று பதிலளிக்கிறார்.
ஆசிரியர், “நீயே ஏன் செய்யல?” என்று ஆச்சரியமாக வினவ, சிறுமி, “எனக்கு கை வலிக்குது, அதான் அக்கா செய்யுறாங்க” என்று அழகாக சமாளிக்கிறார்.
இந்த பதிலைக் கேட்டு அருகில் இருப்பவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, ஆசிரியர் மீண்டும், “நீயே வேலை செய்யலைன்னா எப்படி புத்திசாலியாகுவ?” என்று கேட்கிறார். உடனே சிறுமி, “இன்னிக்கு எனக்கு லீவு” என்று அலட்டலாக பதிலளிக்கிறார்.
ஆசிரியர், “நாளைக்குத்தான் லீவு” என்று சிரித்து சொல்ல, சிறுமி தயங்காமல், “இன்னிக்கு ரக்ஷாபந்தன், அதான் வேலை செய்யல” என்று தன் மழலை வாதத்தால் அனைவரையும் கவர்கிறார். இந்த சிறுமியின் குறும்பு மற்றும் அப்பாவி தன்மையால் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ‘மழலை நகைச்சுவையின்’ உச்சமாக பேசப்படுகிறது