நான் restroom போனா கூட சொல்லிட்டு போனுமா?- எடப்பாடி பழனிசாமி
Top Tamil News September 19, 2025 07:48 PM

கூட்டணி அமைந்தபோதே, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என அமித்ஷா கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் இதை விவாதிப்பது சரியா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப்போகிறேன் என எல்லோருக்கும் கூறிவிட்டு தான் சென்றேன். அரசு காரில் தான் சென்றேன். திரும்பி வரும்போது, முகத்தை துடைத்தேன். அந்த இரண்டு நொடி காட்சியை வைத்துக்கொண்டு சில ஊடகங்கள் அவதூறு பரப்புவது ஏற்புடையதல்ல. இனி நான் restroom போனாலும், ஊடகத்தினரிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும் போல, அப்படி தான் ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலியான செய்தியை மேடையில் நேற்று பேசுகிறார் ஸ்டாலின். அதனால் தான் அவரை பொம்மை முதலமைச்சர் என்கிறோம். நான் முகத்தை மறைத்தேன் என்று தவறான செய்தியை குறிப்பிட்டு பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். எங்கள் ஆட்சியின் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று, சட்டையை கிழித்துக்கொண்டு சென்றவர் அவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் அப்படி செய்வார்கள்.

உள்துறை அமைச்சரை சந்தித்து தேசத்திற்காக பாடுபட்ட பசும்பொன் ஐயாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரியிருக்கிறேன். கூட்டணி அமைந்தபோதே, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என அமித்ஷா கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் இதை விவாதிப்பது சரியா?. சமீப காலமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகின்றனர். கட்சி கட்டுப்பாட்டை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வாடிக்கையே. 2011ல் அம்மா அவர்கள் தினகரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். அவர் என்னை பற்றி பேசுகிறார். பசும்பொன் தேவர் ஐயாவுக்கு பாரத ரத்னா கோருவோம் என கூறிய பிறகு தான், தினகரன் எனக்கு எதிராக பேசுகிறார். என்ன காரணம் என தெரியவில்லை. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் ஆட்சி அமைத்தபோது, நீங்கள் எங்களை ஆதரித்தீர்களா? ஆட்சி 3 மாதத்தில் கவிழும், 6 மாதத்தில் கவிழும் என்றீர்கள். 4 ஆண்டு கால ஆட்சியில், கேட்ட திட்டங்களுக்கு எல்லாம் நிதி கொடுத்தது மத்திய அரசு. அந்த அடிப்படையில் அவர்கள் உதவினார்கள் என்றேன்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.