Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில வருடங்களாகவே தன்னிடம் அனுமதி பெறாமல் திரைப்படங்களில் தனது பாடல்களை பயன்படுத்துவதற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார். ஏற்கனவே Coolie, Mrs and Mr, Manjummel boys, உள்ளிட்ட சில படங்களுக்கு இப்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பொதுவாக இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைகளை சில ஆடியோ நிறுவனங்கள் வைத்திருக்கிறது. அந்த நிறுவனங்களிடம் தயாரிப்பு நிறுவனங்கள் என்ஓசி வாங்கிவிட்டதாக சொன்னாலும் இளையராஜா அதை ஏற்பதில்லை.
குட் பேட் அக்லி படத்தில் 3 பாடல்கள்:ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று இடங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். எனவே இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. அதில் 5 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும், தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் ஆடியோ நிறுவனத்திடம் அனுமதி பெற்று விட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சொல்லியும் நீதிமன்றம் ஏற்கவில்லை.
எனவே, இளையராஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லி அந்த பாடல் தொடர்பான காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. படம் வெளியாகி மூன்று வாரத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்நிலையில்தான் இளையராஜா சமீபத்தில் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
தயாரிப்பாளருக்கு 150 கோடி நஷ்டம்:குட் பேட் அக்லி திரைப்படத்தில் இன்னமும் தனது பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் குட் பேட் அக்லி படத்தை தூக்கி விட்டது. இந்தப் படத்தை 110 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்தது. தற்போது படத்தை தூக்கி விட்டதால் 80 கோடி வரை திருப்பிக் கொடுக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டிருக்கிறது.
ஏற்கனவே 70 கோடி நஷ்டம், தற்பொழுது 80 கோடி எனில் 150 கோடி வரை நஷ்டம் வருகிறது. இதனால் அதிர்ந்து போன தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது. அதில் இனிமேல் மீண்டும் சென்சார் செய்து அந்த பாடல்களை நீக்குவது கடினம் என சொல்லி இருக்கிறதாம்.