திடீரென உயரும் Adani, Urban Company! - பங்குசந்தை வீழ்ச்சியிலும் டாப் கியரில் செல்லும் நிறுவன பங்குகள்!
WEBDUNIA TAMIL September 19, 2025 09:48 PM

இன்று காலை முதலே பங்குச்சந்தை சரிவை நோக்கி பயணித்து வரும் நிலையில் அதானி, Urban company பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை (SENSEX) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NIFTY) குறியீடுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையிலும் சில நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்படியாக இன்று அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் வேகமான உயரத்தை அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அதானி பவர் ஒரு பங்கின் விலை ரூ630 ஆக இருந்த நிலையில் இன்று காலை முதலே வேகமான ஏற்றம் கண்டு தற்போது ரூ.695 ஐ நெருங்கியுள்ளது. இது ஒரு பங்கின் விலையில் கிட்டத்தட்ட 9.35 சதவீதம் ஆகும். தொடர்ந்து அதானி எண்டெர்ப்ரைஸ், க்ரீன் எனெர்ஜி நிறுவனங்களும் உயர்வை சந்தித்துள்ளன. சமீபத்தில் அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என SEBI கூறியதன் விளைவாக பங்குகள் உயர்வதாக கணிக்கப்படுகிறது.

அதுபோல புதிதாக IPO வை அறிமுகம் செய்து கடந்த சில நாட்கள் முன்னதாக பங்குச்சந்தையில் லிஸ்டிங் ஆன Urban Company நிறுவனத்தின் பங்குகளும் ஏற்றத்தை சந்தித்துள்ளன. பட்டியலில் ஒரு பங்கின் விலை ரூ.162 என அறிமுகமாகி கடந்த இரண்டு நாட்களில் ரூ.180 ஐ நெருங்கியுள்ளது. இன்று ஒரு நாளில் ரூ.18 (11.12%) உயர்ந்துள்ளது இந்த பங்குகள். இந்த அர்பன் கம்பேனி வீட்டை சுத்தம் செய்தல், மின்சார பொருட்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வீடு சார்ந்த பணியாளர் சேவையை வழங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப சேவை நிறுவனமான Redington நிறுவன பங்குகள் கடந்த 15ம் தேதி அன்று ரூ.240 ஆக இருந்த நிலையில் ஒரு வாரத்தில் 26 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ305 ஐ தொட்டுள்ளது. இன்றைக்கு மட்டும் ரூ.16 உயர்வை கண்டுள்ளது. மேலும், கனரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளும் இன்றைய வீழ்ச்சியான சந்தையிலும் உயர்வை கண்டு வருகின்றன.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.