பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) தனது உறுப்பினர்களுக்கு புதிய பாஸ்புக் லைட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பு, பணம் எடுத்த விவரங்கள், தற்போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பண இருப்பு ஆகியவற்றை ஒரே இடத்தில் ஆன்லைன் மூலம் லாகின் செய்து பார்க்க முடியும். முன்பு உறுப்பினர்கள் பாஸ்புக் விவரங்களை தனி பாஸ்புக் போர்டலில் லாகின் செய்து மட்டுமே பார்க்க வேண்டியிருந்தது. தற்போது பாஸ்புக் லைட் வசதியால் ஒரே லாகின் மூலம் அனைத்து முக்கிய சேவைகளையும் எளிதாக பெறலாம்.
அனைத்து பிஎஃப் விவரங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம்இந்த புதிய வசதி குறித்து தொழிலாளர் அமைச்சர் மான்சுக் மாண்டவியா பாஸ்புக் உள்ளிட்ட முக்கிய சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதால் பயனாளர்களின் அனுபவம் மேம்படும். விரிவான பாஸ்புக் விவரங்கள் தேவைப்பட்டால் வழக்கம் போல பழைய பாஸ்புக் போர்டலை பயன்படுத்தலாம் என்றார்.
இதையும் படிக்க : தீபாவளிக்கு அறிமுகமாகும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி? வெளியான ஹேப்பி நியூஸ்!
பிஎஃப் கணக்கு மாற்றங்களின் நிலையை தெரிந்துகொள்ள அனெக்ஸ்சர் கே (Annexure K) என்ற சான்றிதழ் முக்கியம். இப்போது இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்களது மெம்பர் போர்டலில் இருந்து அனெக்சர் கே சான்றிதழை நேரடியாக டவுன்லோடு செய்யலாம். முன்பு இதனை பெற பிஎஃப் அலுவலக்களுக்கு சென்று, தனியாக விண்ணப்பித்து பெற வேண்டிய சூழல் இருந்தது. இனி உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் எளிதாகப் பெறலாம். இதன் முழு வெளிப்படைத் தன்மை நமக்கு கிடைக்கும்.
இனி தீர்வுகள் விரைவில் கிடைக்கும்இபிஎஃப்ஓ தீர்வுகள் உடனடியாக கிடைக்கும் வகையில் மிக முக்கிய நடவடிக்களை எடுத்துள்ளது. முன் பிஎஃப் கணக்கு மாற்றம், பணம் பெறுதல், முன்கூட்டியே அட்வான்ஸ் பெறுவது, முந்தைய சேமிப்பு விவரங்கள், ரீஃபண்ட், வட்டியை சரி செய்தல் போன்றவை அலுவலர்களின் ஒப்புதலோடு செய்ய வேண்டியிருந்தது. இப்போது அனைத்தையும் பிராந்திய அலுவலக அளவலேயே அனுமதிக்க முடியும். கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சேவை வழங்கல் விரைவாக நடக்கும்.
அதே நேரம் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம், சேவை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலிலின் (SEPC) முக்கிய ஆலோசகராக அபிஜித் சின்ஹாவை நியமித்துள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர் வருகை இபிஎஃப்ஓ செயல்பாடுகள் முன்பை காட்டிலும் தொழில்நுட்ப ரீதியாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க :பிஎஃப் பணத்தை எடுப்பதில் ஊழியர்கள் சிக்கல்களை சந்திப்பது ஏன்?.. இவை தான் முக்கிய காரணங்கள்!
இந்த புதிய வசதிகள் பயனர்களுக்கு சேவைகளை பெற நடைமுறைகளை மிகவும் எளிதாக்கியிருக்கிறது. இதன் மூலம் பிஎஃப் அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் தேவை அவர்களுக்கு ஏற்படாது. எளிதாக ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலான சேவைகளை அவர்களால் பெற முடியும் என்பது இதில் கூடுதல் சிறப்பு.