செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் முகமூடி அணியவில்லை, டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்து அதிமுகவிற்குள் நுழைந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை பாயும் என்பதே சிறப்பு தீர்மானம். அதிமுக சிறப்பு தீர்மானத்தின் படி செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும். கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விசுவாசம் என்றால் என்ன விலை என்று கேட்கும் ரகுபதிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனது டெல்லி பயணம் குறித்து செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. ஸ்டாலின் என்னைப் பற்றியே யோசனை செய்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர்தான் சட்டையை கிழித்துக் கொள்வார்; அப்படிப்பட்ட நிலையில் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் என்னைப் பற்றி பேச எந்த தார்மீகமும் இல்லை. ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இன்று அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்? கொடுப்பதைக் கொடுத்துப் பெறுவதைப் பெற்றார் செந்தில் பாலாஜி.
இனிமேல் Rest Room போனால் கூட உங்களிடம் சொல்லிட்டுதான் போகணும் போல. அப்படிப்பட்ட நிலைமைக்கு இன்றைய அரசியல் சென்றுவிட்டது. எழுச்சி பயணம் சிறப்பாக இருக்கிறது என என்னிடம் அமித்ஷா கூறினார். அவருடனான சந்திப்பு வெளிப்படையானது. அண்மைகாலமாக வேண்டுமென்றே கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகின்றனர். அவர்கள் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது” என்றார்.