காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை சென்ற பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில் அதே பேருந்தில் பயணம் செய்த 26 வயது இளைஞரொருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி காவல்துறையிடம் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அதனடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.
இதனையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராகேஷ் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞர், ஒன்றிய அரசின் வேளாண் துறையில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!
சமீபகாலமாகவே வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை தெரிவித்துள்ளது. ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு மத்திய அரசு பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!