மத்திய பிரதேசம் பன்னா மாவட்டத்தில் இருக்கும் பிரபல வைரச் சுரங்கம், பலரின் கனவுகளை நனவாக்கியிருக்கிறது. அங்கு, ராஜ்பூரை சேர்ந்த பழங்குடியினப் பெண் வினிதா கோண்ட், குத்தகைக்கு எடுக்கப்பட்ட பகுதியில் தேடிக்கொண்டிருக்கும்போது, திடீரென அதிர்ஷ்டம் கிட்டியது.
அவர் ஒரே நேரத்தில் 3 வைரங்களை கண்டெடுத்தார். அவற்றில் ஒன்று 1.48 காரட், மற்றவை 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடையுடையவை. தற்போது அந்த வைரங்கள் அரசாங்கம் மூலம் ஏலத்திற்கு வரவிருக்கின்றன.
மேலும், வியாபாரிகள் கணிப்பின்படி, இவை பல லட்சம் ரூபாய்க்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுகுறித்து வைர வியாபாரி அனுபம்சிங் தெரிவித்ததாவது,"இந்த 3 வைரங்களில் ஒன்று மிக உயர்தரமானது.
மற்ற இரண்டின் தரம் சாதாரணமாக இருந்தாலும், சந்தையில் நல்ல விலைக்கு போகும்” என்று தெரிவித்தார்.இச்சம்பவம் பன்னா மாவட்டத்தில் வைரம் தேடி வரும் பலருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.