தொடர் சரிவில் தங்கம்.. நகைப்பிரியர்கள் உற்சாகம்!
Dinamaalai September 19, 2025 05:48 PM

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உட்பட  பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை கடந்து செல்கிறது. 

 

செப்டம்பர் 7ம் தேதி  ஒரு சவரன் ரூ.80000 என்ற உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, 9ம் தேதி ரூ.81000 என்ற நிலையையும் கடந்தது. இந்நிலையில்  நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10280க்கும், ஒரு சவரன் ரூ.82240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன் மூலம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் தொட்டுவிட்டது.   

இந்த சூழலில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ50 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ10220க்கும், சவரன் ரூ.400 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ,81,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 141-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,41,000க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.