ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் (Kitchen) இரும்புச்சட்டி (Rusty Iron Kadhai) ஒரு இன்றியமையாத பொருளாகும். இது காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து வகையான உணவையும் சமைக்க உதவுகிறது. பிற உணவு தயாரிக்கும் சட்டிகளை காட்டிலும் இரும்பு சட்டியில் சமைப்பது உணவில் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் என்று கூறப்படுகிறது. இதே நேரத்தில், இது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் விடும்போது துருப்பிடிக்க தொடங்குகிறது. மேலும், தொடர்ந்து சமைக்கும்போது, அதன் அடிப்பகுதியில் கருப்பு கருப்பாக திட்டுகள் சேர தொடங்கும். இவற்றை சுத்தம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக பல மணிநேரம் செலவு செய்தாலும் முற்றிலுமாக சுத்தம் செய்ய முடியாது. அந்தவகையில், துருப்பிடித்த இரும்பு கடாயை சுத்தம் செய்வதகாக எளிய மற்றும் விரைவான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வீட்டை மெல்ல மெல்ல அழிக்கிறதா கரையான்..? எளிதாக விரட்ட சூப்பரான பொருட்கள்!
துருப்பிடித்த கடாயை சுத்தம் செய்வது எப்படி..?ALSO READ: சமைக்கும்போது உணவில் அதிக உப்பா..? உணவை வீணாக்காமல் இப்படி சரிசெய்யலாம்!
துருவை நீக்குவதில் படிகாரம் ஏன் பயனுள்ளதாக இருக்கிறது..?பொதுவாகவே, இரும்பு பாத்திரத்தில் உள்ள துரு மற்றும் கருப்பு திட்டுகளை கரைக்கும் லேசான அமில பொருளாக படிகாரம் செய்ல்படுகிறது. இது கடாய் அல்லது பாத்திரத்தில் படியும் எண்ணெய், துரு மற்றும் மசாலா எச்சங்களை நீக்கி, மற்ற முறைகளை விட பாத்திரங்களை வேகமாகவும், எளிதாகவும் சுத்தம் செய்ய உதவி செய்யும்.
படிகாரமானது துரு மற்றும் கருப்பு திட்டுகளை திறம்பட நீக்குகிறது. இந்த முறையின் உதவியுடன், நீங்கள் மணிக்கணக்கில் கடாயை தேய்க்க வேண்டியதில்லை.