தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. கஞ்சா சாக்லேட் வந்து விட்டது. ஆம்லெட்டில் கூட கஞ்சா ஆம்லெட் வந்து விட்டது என கூறுகிறார்கள். தமிழகம் போதைப்பொருள் விற்பனையால் சீரழிந்து கிடக்கிறது.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் இதுபற்றி சட்டசபையில் நான் பலமுறை பேசினேன். ஆனால், அவற்றை எல்லாம் அப்போது கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் இப்போது தாமதமாக விழித்து கொண்டு இருக்கிறார். மூன்றரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று ஞானம் பிறந்தது போன்று உரையாற்றுகிறார். இப்படிப்பட்ட தாமதமாக விழித்து கொள்ளும் முதல்-அமைச்சர் நமக்கு தேவையா?’ என்று ஆவேசத்துடன் பேசினார்.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. அது உண்மைதானே... என பொதுமக்களை நோக்கி கேட்டார். தொடர்ந்து அவர், கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்காத இடங்களே இல்லை என்ற அளவில் அது அதிகரித்து காணப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கஞ்சாவை உபயோகித்து சீரழியும் நிலை காணப்படுகிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.