வில்லியனூர் துணை மின் நிலையம்ரூ. 15 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி. தட்டாஞ்சாவடியில் உள்ள துணை மின் நிலைய கட்டிடத்தின் முதல் மாடிக்கு செல்ல படிகள் அமைக்கவும், பழுதடைந்துள்ள கழிவறைகளை செப்பனிடவும் ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, துணைமின் நிலையம் மேம்படுத்தும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், செயற்பொறியாளர்கள் சந்திரகுமார், ராஜஸ்ரீ, இளநிலைப் பொறியாளர்கள் கோப்பெருந்தேவி, ராமச்சந்திரன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் ராமதாஸ், கோபி, காசிநாதன், தொமுச தலைவர் அங்காளன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர்கள் அரிகிருஷ்ணன், ஜெகன்மோகன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை ,அக்பர், சபரிநாதன், ராஜி, ஜனா, ரஃபிக், மிலிட்டரி முருகன், சரவணன், ரவி, வீரக்கண்ணு , முத்து, கோதண்டம், சேகர், தெய்வநாயகம், முருகன், முருகேசன், சிராஜ், ரமேஷ், வெங்கடேசன், கார்த்திகேயன், நடராஜன், கோவிந்தராஜ், ஷர்புதீன், தர்ஷனா, பாலு, வாசு, ரகு, அபிமன்னன், சந்தோஷ், மணி, அருண், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.