மத்திய பிரதேச மாநிலத்தில் மது குடிக்க பணமெடுத்ததை தட்டி கேட்டதால் மகளை, தந்தையே கொடூரமாக குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநில தலைநகரான குவாலியர் அருகேயுள்ள ஜானக் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பத்தம் சிங். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டதால் நடக்க முடியாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டிலிருந்து பணம் திருடி மது குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் மது குடிக்க பணம் திருடியிருக்கிறார் சிங். தந்தை பணம் திருடுவதை பார்த்த அவரது மகள் ராணி குஷ்வகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பத்தம் சிங், அருகிலிருந்த கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தின் போது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலையில் ஈடுபட்ட தந்தை பத்தம் சிங்கை கைது செய்தனர். இதன் பிறகு கொலை செய்யப்பட்ட ராணி குஷ்வகாவின் உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் பயங்கரம்... அடகு கடை அதிபர் குத்தி கொலை.!! மர்ம நபர் வெறி செயல்.!!