மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகர் பால்டா தொழிற்சாலை பகுதியில் அமைந்த மூன்று தொழிற்சாலைகளில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் தொடர் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டு ஆலைகளில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், பேரிடர் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்துக் குறித்து தீயணைப்பு துறையின் காவல் துணை ஆய்வாளர் தெரிவிக்கையில், பால்டா அகர்வால் வளாகத்தில் இருந்த 3 தொழிற்சாலைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாரும் சிக்கி கொள்ளவில்லை.
கடந்த 8-ந்தேதி இரவிலும் பால்டா தொழிற்சாலை பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் இதேபோன்று தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இntha தீ விதத்திலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்றுத் தெரிவித்தார்.