கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... திருச்சியில் பரபரப்பு!
Dinamaalai October 14, 2025 06:48 AM

திருச்சி மாவட்டத்தில்     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்ட ஆட்சியர், ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அனைவரும் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  


தகவலின் பேரில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருச்சியை பொறுத்தவரை  கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் மட்டும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, தவெக தலைவர் விஜய்  வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.