அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "KarurTragedy தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் CBI விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
"நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை" என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவை அதிமுக வரவேற்கிறது.
தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம்.
வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்!
தவெக நிர்வாகி லயோலா மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாங்கள் கேட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தர்மம் வெல்லும்.