இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதற்கு பதிலளித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஃபாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ், இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 270 ரன்கள் எடுக்க வேண்டிய கடின நிலைக்குத் தள்ளப்பட்டது.
இரண்டாவது இன்னிங்சில் தொடக்கத்தில் விரைவில் விக்கெட்டுகள் இழந்த வெஸ்ட் இண்டீஸ், கேம்ப்பெல் – ஷாய் ஹோப் கூட்டணியால் மீண்டது. இருவரும் சுழல் தாக்குதலை திறம்பட சமாளித்து அபாரமாக ஆடினர். 199 பந்துகளில் 115 ரன்கள் எடுத்த கேம்ப்பெல் சதம் அடித்து ஜடேஜா பந்தில் அவுட்டானார். தொடர்ந்து ஹோப் நிதானமாக ஆடி 214 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தற்போது 1 ரன் முன்னிலையில் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் வைத்துள்ளது. ஆட்டம் முடிவதற்கு இன்னும் ஒன்றரை நாட்கள் உள்ள நிலையில், ஆட்டத்தை டிரா செய்யுமா அல்லது இந்தியா மீண்டும் தாக்குமா என்பது சுவாரஸ்யமாக மாறியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?