இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை... நெல்லையில் சோகம்!
Dinamaalai October 14, 2025 09:48 PM

 


நெல்லை அருகே குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திக் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தையாவின் மனைவி முத்துலட்சுமி (27) இரண்டு பெண் குழந்தைகளான முத்தமிழ் (4) மற்றும் சுசீலா (3) ஆகியோருடன் வசித்து வந்தார்.


 
நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான முத்துலட்சுமி, தன் இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிய பின்னர் தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது..


 
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மேலும் தாய் முத்துலட்சுமியின் உடலை இன்று காலை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.