சாத்தூர் அருகே அட்டை மில்லில் விஷவாயு தாக்கி வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம் பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்த சுஜாத் என்பவருக்கு சொந்தமான அட்டை மில் செயல்பட்டு வருகிறது. இந்த அட்டை மில்லில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும்,வட மாநில தொழிலாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை பீகாரை சேர்ந்த சோன்லால்(17), அபிதாப்(30), என் சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன்(35) ஆகிய மூவரும் மில்லில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளனர். அப்பொழுது விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சோன்லால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் அபிதாப்,கணேசன் ஆகிய இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதூரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.