தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஜாமின் மனு ஒத்திவைப்பு
Top Tamil News October 14, 2025 09:48 PM

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன்  ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட காரணத்தால், வழக்கில் சிபிஐ தரப்பையும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும் என்பதால் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது. 


கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்  கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி  41 பேர் உயிரிழந்தனர்.  இது தொடர்பாக தமிழக வெற்றிக்  கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு புலனாய் குழு மாற்றப்பட்டதால் சிறப்பு புலனாய்வு குழுவினர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட காரணத்தால், வழக்கில் சிபிஐ தரப்பையும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும் என்பதால் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.