மலசிக்கல் இல்லாமல் டாய்லெட் வர சில பக்காவான வழிகள்
Top Tamil News October 17, 2025 02:48 PM

பொதுவாக ஒரே இடத்தில் அமர்ந்தே நேரத்தைக் கழிப்பது மற்றும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது என்ற வாழ்க்கை முறையால்  மலச்சிக்கலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பெருகியுள்ளது. . உடல் செயல்பாடு அதிகமாகும்போது இதய துடிப்பு அதிகரிக்கிறது; இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, சிறுகுடல் தசைகள் தூண்டப்படுகின்றன. எனவே மலச்சிக்கலை தவிர்க்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.மலச்சிக்கலால் ஒருவரின் அன்றாட வேலைகள் பாதிக்கும் .ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தவிர்க்க உதவும். 
2.மலச்சிக்கலை தவிர்க்க பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யவில்லையென்றாலும் நடப்பது, வீட்டை சுத்தம் செய்வது, மாடிப்படி ஏறி இறங்குவது போன்றவற்றை செய்தாலே தவிர்க்கலாம். 
3.மலச்சிக்கலை தவிர்க்க நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடலாம் . நார்ச்சத்து அதிகமாக சேரும்போது குடல் சுவர்களிலுள்ள தசைகள் சுருங்கி விரிவதை அது தூண்டுகிறது. 
4.நார்சத்து உணவு  காரணமாக செரிக்கப்பட்ட உணவு நகருகிறது. 
5.அதனால் நார்ச்சத்துள்ள உணவுகளான அதிக காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டை வகைகள் (நட்ஸ்) இவற்றை சாப்பிடுவது மலச்சிக்கலை தீர்க்கும். 
6.அந்த நார்ச்சத்து உணவை அளவுக்கதிகமாக சாப்பிடாமல் போதிய அளவு கவனமாக சாப்பிடவேண்டும். 
7. ஒருவர் போதிய அளவு நீர் பருகவில்லையென்றால் உடலில் ஏற்படும் பலவித குளறுபடிகளில் மலச்சிக்கலும் ஒன்று.
 8.மல சிக்கல் உள்பட உடலின் பல செயல்பாடுகள் செம்மையாக நடைபெற நீர்ச்சத்து அவசியம். 
9.தண்ணீர் குடலில் சேரும்போது மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. 
10.சிறிதளவு நீர் குறைந்தாலும் மலச்சிக்கல் மூலம் அக்குறை வெளிப்படலாம். 
11.மலச்சிக்கலை தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் நீர் பருகினால் மலச்சிக்கல் ஏற்படாது.. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.