உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி, தினசரி தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் என பல்வேறு அம்சங்களை வழங்கும் இந்த தளம், பள்ளி முதல் அலுவலகம் வரை பலரின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகி உள்ளது.
பயனர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் வாட்ஸ் அப்பைச் சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக அறிமுகமாக உள்ள அப்டேட்டின் மூலம் நமக்கு நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஸ்டேடஸ் வைத்தால் அதற்கான அலர்ட் வரும் வசதி கிடைக்கிறது. இதனால், அவர்கள் ஸ்டேடஸ் பதிவுகளை உடனே தெரிந்துகொண்டு பார்க்கலாம்.
அனைவரின் ஸ்டேடஸ்களையும் பார்க்க விரும்பாதவர்கள், விருப்பமான நபர்களின் ஸ்டேடஸ்களை மட்டும் பின்தொடர விரும்புவோருக்கு இந்த புதிய அம்சம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி தற்போது படிப்படியாக வெளியிடப்பட்டு வருவதுடன், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?