ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சென்னை அருகே சோழவரம், காரனோடை டோல் பிளாசா பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு மேற்கொண்ட போலீசார், அசோக் லேலண்ட் வகை லாரியை மடக்கி சோதனை நடத்தினர். ஆரம்ப சோதனையில் எந்தப் பொருளும் தெரியாமல் இருந்தாலும், விசாரணை தீவிரமாக மேற்கொண்ட போது, லாரியின் இடையே 320 கிலோ கஞ்சா ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கெருக்கம்பாக்கைச் சேர்ந்த அப்துல் இப்ராஹிம் (58), திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த மதன் பாபு (29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடி” என்றனர். கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?