மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும்.
சுய-பட்டியலிடல் குடிமக்கள் தங்களின் விவரங்களை டிஜிட்டல் முறையில் தாங்களாகவே பதிவு செய்ய நவம்பர் 1 முதல் 7, 2025 வரை வசதி அளிக்கப்படும். வீட்டுப் பட்டியலுக்கான முன்னோட்ட சோதனை அனைத்து மாநிலங்களிலும் 2025 நவம்பர் 10 முதல் 30 வரை நடத்தப்படும். இதன் நோக்கம், முழு அளவிலான கணக்கெடுப்பிற்கு முன் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்வதாகும்.
இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக குடிமக்களின் சாதி விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026, முதல் பிப்ரவரி 28, 2027, வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் பெரும்பாலான பகுதிகளுக்கு மார்ச் 1, 2027 ஆகவும், பனிப் பிரதேசங்களுக்கு அக்டோபர் 1, 2026 ஆகவும் குறிப்புத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் 34 லட்சத்திற்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின் நடைபெறும் எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva