ஜப்பானில் சோகம்... முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா காலமானார்.. மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டவர்!
Dinamaalai October 18, 2025 03:48 PM

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. பல நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சொந்த ஊரான ஒய்டாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். 

ஜப்பான் சோஷியலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான முர்யமா, 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில், ஜப்பானின் சர்வதேச வரலாற்றில் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றான மன்னிப்பு அறிக்கையை 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பு கோரப்பட்டது.

முர்யமாவைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பதவி வகித்தவர்கள் அனைவரும் போர்க் குற்றங்களுக்கு மன்னிப்பு கோரினர். ஆனால் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இதை நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.