வடஇந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகள், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராடும் வாய்ப்பு பெற்றனர்.
இந்தியாவின் இரு தொன்மையான ஆன்மிக மற்றும் கல்வி மையங்களாக விளங்கும் வாரணாசி மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாசார உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய அறிவு அமைப்பு இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதன் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், அறிஞர்கள், பக்தர்கள், கலாசார ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களை மகா கும்பமேளா நிர்வாகமும், பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகமும் சிறப்பாக வரவேற்றது.
தமிழக பிரதிநிதிகள் நேற்று திரிவேணி சங்கமத்திற்குச் சென்று புனித கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடி புண்ணியம் பெற்றனர். பின்னர், அவர்கள் அயோத்திக்குச் சென்று ஸ்ரீ ராமர் கோவிலில் தரிசனம் செய்தனர்.
நீராடிய பின்னர் பேசிய பிரதிநிதிகள், “காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி எங்களை வடஇந்திய பாரம்பரியத்துடன் ஆழமாக இணைத்தது. இது கலாசார ஒற்றுமைக்கும், ஆன்மிக ஒத்துழைப்பிற்கும் ஒரு பாலமாக உள்ளது” எனக் கூறினர்.
மேலும், இந்த முயற்சியை முன்னெடுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டு தெரிவித்து, அதை செயல்படுத்தி வரும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கும் நன்றி தெரிவித்தனர். காசி தமிழ் சங்கமம் மூலமாக வடக்கு–தெற்கு கலாசார இணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?