தங்கம் விலை சற்றே சரிவு... நகைப் பிரியர்களுக்கு ஆறுதல்!
Dinamaalai October 18, 2025 03:48 PM

 

நேற்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்த தங்க விலை இன்று (சனிக்கிழமை) சற்று சரிவை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,900க்கும், ஒரு சவரன் ரூ.95,200க்கும் விற்பனை ஆனது. ஆனால் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.300வும், சவரனுக்கு ரூ.2,400வும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,200க்கும், சவரன் ரூ.97,600க்கும் சென்றது. இதன் மூலம் இம்மாதம் மட்டும் தங்க விலை சவரனுக்கு ரூ.10,000 உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தங்க விலை குறைவடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.11,950க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை குறைந்ததால் நகைபிரியர்களுக்கு சிறிய அளவிலாவது நிம்மதி கிடைத்துள்ளது.

அதேபோல் வெள்ளி விலையும் சரிவு கண்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.203, கிலோ ரூ.2,03,000 என்ற விலையில் இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190க்கும், கிலோவுக்கு ரூ.13,000 குறைந்து ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.