புதுவருடம் 2026ல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று டிக்கெட்கள் ஒதுக்கீடு.. எப்படி புக் செய்வது?
Dinamaalai October 19, 2025 12:48 PM

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை வரும் புதுவருடம் ஜனவரியில் பக்தர் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் ஒதுக்கீட்டை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு 21ம் தேதி காலை 10 மணி வரை செய்யலாம். இதற்கான தொகையை செலுத்தியவர்களுக்கு 21ம் தேதி முதல் 23ம் தேதி மதியம் 12 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே நாளில் மதியம் 3 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கப்படும். மேலும், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 24ம் தேதி மாலை 3 மணிக்கு வழங்கப்படவுள்ளன.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் (₹300 கட்டண டிக்கெட்) 25ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதி அறைகள் தொடர்பான ஆன்லைன் ஒதுக்கீடு அதே நாளில் மாலை 3 மணிக்கு தொடங்கும். பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in  என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.