அ இ அ தி மு கவின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அப்பநாயக்கன்பாளையம், நேரு நகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கோவை புறநகர் வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி ஒன்றாவது வட்ட கழகம் சார்பில், அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் எம் ஜி ஆரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் கோவை ராக்கிபாளையம் பிரிவு அருகே உள்ள நேரு நகர் பகுதியில் குருடம்பாளையம் நேரு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைந்து 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அ இ அ தி மு க வினர் 54ம் ஆண்டு தொடங்க விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி ஆகியோர் வாழ்த்துக்களுடன், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் ஆணைக்கிணங்க,
கோவை புறநகர் வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி ஒன்றாவது வட்ட கழகம் சார்பில் அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில், எம் ஜி ஆரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கோவை புறநகர் வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி ஒன்றாவது வட்ட கழக பகுதி செயலாளர் சாந்திபூசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக பொறுப்பாளர்களும், பூத் கமிட்டி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கோவை ராக்கிபாளையம் பிரிவு அருகே உள்ள நேரு நகர் பகுதியில் குருடம்பாளையம் நேரு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிளைச் செயலாளர் ஏ கே சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம் ஜி ஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சிக் கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில் ஒன்றிய துணைச் செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் டி ரவி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், தாமு மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.