Suriya47: சூர்யா - ஜித்து மாதவன் படத்தில் இணையும் பிரபல நடிகர்!.. இவர் வந்தா களை கட்டுமே!..
CineReporters Tamil October 19, 2025 12:48 PM

கோலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஆனால் கடந்த பல வருடங்களாகவே இவருக்கு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்கம் 2-வுக்கு பின் இவருக்கு ஒரு அசத்தலான வெற்றி கிடைக்கவே இல்லை. அவரும் பல கதைகள் கேட்டு பல இயக்குனர்களின் படங்கள் நடித்து பார்த்துவிட்டார். ஆனால் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை பெறவில்லை. இடையில் ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்களும் பேசப்பட்டாலும் அந்த படங்களை தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடுமையான உழைப்பை கொட்டி சூர்யா நடித்து வெளிவந்த கங்குவா படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது
. அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ரெட்ரோ படமும் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்திருக்கிறார் சூர்யா. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு திரைப்படம் ஒரு பக்கா கமர்சியல் மசாலா படமாக உருவாகி இருக்கிறது. ஆனால், பல காரணங்களால் அப்படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அந்த படத்திற்காக சில நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்கிறார்கள். பொறுமை இழந்த சூர்யா லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி கதையில் நடிக்கப் போய்விட்டார். இந்த படத்தின் படிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இது சூர்யாவின் 46வது திரைப்படமாகும். ஒருபக்கம் சூர்யாவின் 47வது படத்தை இயக்குவது மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது ஏற்கனவே உறுதியாக விட்டது.

இந்நிலையில், ஜித்து மாதவன் - சூர்யா இணையவுள்ள படத்தில் பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே ஜித்து இயக்கத்தில் ஆவேசம் படத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். எனவே அந்த நட்பின் அடிப்படையில் அவர் இந்த படத்தில் நடிக்க வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.