லிவிங் டூ கெதர் வாழ்ந்த காதலர்கள் திடீர் தற்கொலை... வாடகை வீட்டில் பரபரப்பு!
Dinamaalai October 22, 2025 03:48 PM

கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் மாவட்டம், பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லையில் வசித்து வந்த ராகேஷ் பாத்ரா (23) மற்றும் சீமா நாயக் (21) தங்களது உறவினரை அறிவிக்காமல் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் பழக்கம் ஏற்பட்டது.

சமீபத்தில் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்த இவர்களுக்கு இடையே அடிக்கடி மனச்சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 19-ந் தேதி இரவு, ராகேஷ் மற்றும் சீமா தங்கள் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். காலை சிக்கலான நிலையில் வீட்டை திறந்து பார்த்த பிறகு அக்கம் பக்கவர்கள் இருவரையும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில், “தற்கொலைக்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை எனவும், இடையேயான சண்டைகள், பணப் பிரச்சினைகள் மற்றும் மனஅழுத்தம் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் நிகழ்ந்த திடீர் சம்பவம் அக்கம்பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவத்தின் பின்னணி, குடும்ப உறவுகள் மற்றும் முன்னதாக நிகழ்ந்த மனச்சண்டைகளைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.