சமீபத்தில் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கான H1B VISA பெறுவதற்கான கட்டணத்தை அதிகரித்த அமெரிக்கா தற்போது அதில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் பெருவாரியாக அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிபர் ட்ரம்ப் வெளிநாட்டினருக்கான H1B VISA கட்டணத்தை ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இது பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஏற்கனவே H1B VISA பெற்று அதை புதுப்பிப்போர் ஆகியவர்களுக்கு இந்த புதிய கட்டண முறை கிடையாது என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய நடைமுறை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் H1B VISA கட்டணம் குறித்து மேலும் தளர்வுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21ம் தேதி 12.01 மணிக்கு முன்பாக உரிமம் பெற்ற H1B VISA வைத்துள்ளவர், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிப்புக்காக H1B VISA பெற்று வரும் மாணவர்கள் வேலைக்காக வழங்கப்படும் H1B VISA வுக்கு மாறும்போது அவர்கள் புதிய கட்டண முறையில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், H1B VISA வைத்துள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் இந்த புதிய கட்டண முறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K