இன்று 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! - முழு விவரம் இதோ..!
Top Tamil News October 22, 2025 03:48 PM

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.