அமரன் படம் 300 கோடி வசூலை செய்யவும் நாம்தான் அடுத்த விஜய் என நினைத்தார் சிவகார்த்திகேயன். எனவே தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தினார். ஆனால் அடுத்து வந்த மதராஸி திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படம் உலக அளவில் 100 கோடி கூட வசூல் செய்யவில்லை. இந்தியாவில் இப்படம் 73 கோடி மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
ஒருபக்கம் பராசக்தி படத்திற்கு பின் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சாய் அபயங்கர் இசை அமைப்பதாக சொல்லப்பட்டது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படத்தின் வேலைகளும் ஒரே நேரத்தில் துவங்கவிருந்தது.
இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டிருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளத்தை கொடுத்து இந்த படத்தை எடுத்தால் கண்டிப்பா தங்களுக்கு நஷ்டம் வரும் என சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் நினைக்கிறதாம். மதராஸி பட வசூலை காட்டி ‘சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்’ என அந்நிறுவனம் கேட்டும் சிவகார்த்திகேயன் சம்மதிக்கவில்லை.
ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவில்லை எனில் இந்த பிராஜெக்டே வேண்டாம் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முடிவெடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனும் இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்கிறார்கள். இந்த படத்திற்காக ஒரு வருடமாக காத்திருந்தார் வெங்கட் பிரபு. ஊடகங்களிலும், சினிமா விழாக்களிலும் கூட ‘அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என சொல்லிக் கொண்டே இருந்தார்.
பல முயற்சிகளுக்கு பின் இது சாத்தியமான நிலையில் தற்போது இந்த படம் கைவிடப்பட்டால் வெங்கட் பிரபு நிலைமை என்னாகும் என்பது தெரியவில்லை. சிவகார்த்திகேயனையே நம்பிக்கொண்டிருக்காமல் வெங்கட் பிரபு வேறு ஒரு நடிகரை தேடுவது நல்லது என்கிறது கோலிவுட் வட்டாரம்.