Breaking: ஆட்டம் காட்டி ஒரு வழியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு… குஷியில் நகைப்பிரியர்கள்…!!!
SeithiSolai Tamil October 23, 2025 09:48 PM

சென்னை, அக்.23: இன்றைய நாளில் தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தூய்மையான தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.3,20 குறைந்துள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று ரூ.2 சரிவடைந்தது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.174 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,74,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இவ்வளவு அளவில் குறைந்ததால், நகை வாங்கத் திட்டமிடும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளதாக நகை விற்பனை வட்டாரங்கள் தெரிவித்தன

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.