பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
Top Tamil News October 23, 2025 09:48 PM

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல இருக்கிறார். பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பசும்பொன் செல்வதற்கு முன்னதாக 28, 29-ந்தேதிகளில் தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.